உள்ளூர் செய்திகள்

மின்வேலியில் சிக்கி இறந்தவரை கிணற்றில் பிணமாக வீசியது அம்பலம்

Published On 2023-05-01 12:25 IST   |   Update On 2023-05-01 12:25:00 IST
  • விவசாயி கைது
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அருகில் உள்ள கீழ்சிறுபாக்கம் ஊராட் சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நட ராஜன் (வயது 70), விவசாயி.

இவர் கடந்த 27-ந் தேதி இரவு தனது மனைவி மனோன் மணி என்பவரிடம் நிலத் திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் நடராஜன் கிடைக்காத நிலை யில் தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பரது விவசாய கிணற்றில் நடராஜன் பிணமாக மீட்கப்பட்டார்.

நடராஜனின் உடலில் வலது கால் பகுதியில் ரத்த காயங்கள் இருந்ததால் போலீசார் சந்தேகப்பட்டு விசா ரணை நடத்தினர்.

விசாரணையில் பக்கத்து நிலத்துக்காரரான ஏழுமலை (50) என்பவர் தனது நிலத்தில் பயிரிட்டு இருந்த மணிலா, மரவள்ளி கிழங்கு, நெல் போன்ற பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்ப டுத்துவதை தடுப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார்.

இந்த மின்வேலியில் சிக்கி நடராஜன் இறந்தார். போலீ சுக்கு தெரியாமல் இதனை மறைப்பதற்காக, கிணற்றில் பிணத்தை ஏழுமலை வீசியது தெரியவந்தது.

இதையடுத்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். மேலும் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News