உள்ளூர் செய்திகள்
வேளாண் கல்லூரி மாணவிகள் பொங்கல் விழா
- விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த மேல்நகர் கிராமத்தில் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகளின் கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரத்னாஅன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.