உள்ளூர் செய்திகள்
தீப்பற்றி எரிந்த லாரியை படத்தில் காணலாம்.
மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தியிருந்த லாரியில் திடீர் தீ விபத்து
- தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்
- போலீசார் விசாரனை
ஆரணி:
ஆரணி அடுத்த சேவூர் பைபாஸ் சாலை அருகே அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான லாரி பழுதுபார்க்கும் குடோன் உள்ளன.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பழுது பார்த்துவிட்டு குடோனை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலையில் குடோன் வழியாக சென்ற பொதுமக்கள் பூட்டிய குடோனில் இருந்து தீப்பற்றி எரிவதை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குடோனின் பூட்டை பொதுமக்களின் உதவியுடன் உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பழுதடைந்த லாரி மளமளவென எரிந்து கொண்டிருந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அனைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
பின்னர் இது குறித்து ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.