திருவண்ணாமலை பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் அடி அண்ணாமலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதை படத்தில் காணலாம்.
திருவண்ணாமலை பகுதியில் பலத்த மழையில் 5 வீடுகள் இடிந்து நாசம்
- 2 நாட்களாக வெயில் சுட்டெரித்தது
- மின்னல் தாக்கி பசுமாடு சாவு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மழைநீர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளன இந்த மழையால் திருவண்ணாமலை தாலுகாவில் ஒரு வீடு இடிந்து விழுந்தது அதேபோல் ஒரு பசுமாடு மின்னல் தாக்கி இறந்தனர். தண்டராம்பட்டு தாலுக்காவில் ஒரு வீடும் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் 2 வீடுகளும் மழையால் இடிந்து விழுந்து சேதமானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு திருவண்ணாமலை பகுதியில் அதிகபட்சமாக 73 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளன.
இதேபோல் ஜமுனாமரத்தூர் 41, தண்டராம்பட்டு 39, கீழ்பென்னாத்தூர் 29, போளூர் 21, செங்கம் 12 சென்டிமீட்டர் மழை பொய்துள்ளன.