உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை திருடிய வாலிபர் கைது
- ரூ. 2 லட்சம் பணத்தை வைத்து விட்டு, வீட்டிற்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.
- பணத்தை திருடியது கோவை சின்னகாலப்பட்டியைச் சேர்ந்த பாபு (35) என தெரியவந்தது.
அவினாசி:
அவினாசி காசிகவுண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் தனது மோட்டார் சைக்கிள் சீட்டுக்கு அடியில் ரூ. 2 லட்சம் பணத்தை வைத்து விட்டு , வீட்டிற்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது வாகனத்தில் இருந்த பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்தை திருடியது கோவை சின்னகாலப்பட்டியைச் சேர்ந்த பாபு (35) என தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர்.