உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது

Published On 2022-12-30 12:04 IST   |   Update On 2022-12-30 12:04:00 IST
  • பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களின் திருட்டு தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வந்தது.
  • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பல்லடம் :

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களின் திருட்டு தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து வாகன உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

நேற்று பல்லடம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் அவர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்கொண்டு அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் மனிஷ்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கருவம்பாளையத்தில் தங்கி இரவு நேரங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து புல்லட் உள்பட 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News