உள்ளூர் செய்திகள்

அதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்ற காட்சி.

திருப்பூர் மாநகர் மாவட்ட அஇஅதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் - ஏராளமான பெண்கள் பங்கேற்பு

Published On 2023-03-09 15:45 IST   |   Update On 2023-03-09 15:45:00 IST
  • பெண்கள் கலந்து கொண்டு விளையாடி பரிசுகளை பெற்றனர்
  • கேக் வெட்டி வழங்கப்பட்டது.

திருப்பூர் :

உலகம் முழுக்க மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கே.எஸ்.சி., ஸ்கூல் ரோட்டில்உள்ள அந்த கட்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிமுக கட்சியை சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் உள்பட 300 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.. அதிமுக மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன், லக்கி கார்னர், பலூன் உடைக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளையாடி பரிசுகளை பெற்றனர் . இந்த போட்டிகளை முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் நடத்தி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, ஹரிஹரசுதன், வேலுமணி, பாசறை சந்திரசேகர், யுவராஜ், வக்கீல் முருகேசன், எம்.ஜி.ஆர்., மன்ற தேவராஜ், மோட்டார் பாலு, மதுரபாரதி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News