உள்ளூர் செய்திகள்
ஊத்துக்குளி சாலை.
விபத்துக்களை தடுக்க ஊத்துக்குளி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
- காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை அதிகமாக கடக்கின்றனர்
- கதித்தமலை கோவில் ஆர்ச் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி திருப்பூர் செல்லும் முக்கிய சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சார் பதிவாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை அதிகமாக கடக்கின்றனர்.
இதில் கதித்தமலை கோவில் ஆர்ச் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று காலை காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இது கடந்த 3 மாதத்தில் நடக்கும் 4-வது விபத்தாகும். இந்த சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.