உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

கூலி உயர்வு விவகாரம் - பாத்திர தொழிலாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-28 07:52 GMT   |   Update On 2023-03-28 07:52 GMT
  • எவர்சில்வர் 21 சதவீதமும், பித்தளை, செம்பு 30 சதவீதம் என்ற அதே அளவிலாவது கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி வருகிறது.
  • 2 சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை.

அனுப்பர்பாளையம் :

திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய கூலி உயர்வு தொடர்பாக எவர்சில்வர், செம்பு, பித்தளை பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினரிடைேய பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொழில் நலிவடைந்து இருப்பதால் அடுத்த ஒரு ஆண்டிற்கு பழைய கூலியே வழங்கப்படும் என்று கூறப்பட்டது.ஆனால் இதை ஏற்காத கூட்டு கமிட்டி சார்பில் பழைய கூலி உயர்வான எவர்சில்வர் 21 சதவீதமும், பித்தளை, செம்பு 30 சதவீதம் என்ற அதே அளவிலாவது கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவர்சில்வர் தரப்பில் 10 சதவீதமும், பித்தளை தரப்பில் 15 சதவீதமும் கூலி உயர்வு வழங்க முன் வந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் 2 சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து பாத்திர தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு வழங்கக்கோரி நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அனுப்பர்பாளையத்தில் உள்ள பாத்திர உற்பத்தியாளர் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி அறிவித்துள்ளது. இதில் அனைத்து தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டு வேண்டும் என்றும் கூட்டு கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

Tags:    

Similar News