உள்ளூர் செய்திகள்
மனு அளித்த பொதுமக்கள்.
இரும்பு உருக்காலைக்கு எதிராக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அனுப்பட்டி கிராமமக்கள் மனு
- இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது
- 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17-ந் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.
இதற்கிடையே நேற்று இரும்பு உருக்கா லைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி, மாசுக்கட்டு ப்பாட்டு வாரிய அலு வலகம், பல்லடம் ஊராட்சிஒன்றிய அலுவலகம்ஆகிய இடங்களில் பொதுமக்கள் மனு அளித்தனர்.