உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மசக்கவுண்டன்புதூர் கிராமத்தில் தண்ணீர் மாசு குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தல்

Published On 2022-07-29 07:47 GMT   |   Update On 2022-07-29 07:47 GMT
  • ஊராட்சியில், மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • அனைத்து கிராமச்சாலைகளிலும் மரக்கன்றுகள் நட்டு, வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பராமரிக்க வேண்டும்.

குடிமங்கலம் :

குடிமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் ஊராட்சி தலைவர் உமாதேவி தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சியில், மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் 1வது வார்டு உறுப்பினர் பெரியசாமி கொடுத்த மனுவில்,ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமச்சாலைகளிலும் மரக்கன்றுகள் நட்டு, வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பராமரிக்க வேண்டும். மசக்கவுண்டன்புதூர் கிராமத்தில், தண்ணீர் மாசடைந்துள்ளது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாட்கோ திட்டத்தின் கீழ் கட்டித்தரப்பட்ட வீடுகள், பயன்பாடு இல்லாமல், இடிந்து விழும் நிலையில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு புதி வீடுகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News