உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடைபெற்றக் காட்சி.

உடுமலை பூலுவப்பட்டி ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-09-04 06:44 GMT   |   Update On 2023-09-04 06:44 GMT
  • கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றது
  • ஏராளமான பக்தர்கள் திரளாக திரண்டு வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

உடுமலை:

உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீமாகாளியம்மன், செல்வவிநாயகர் கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றது.

மேலும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியுடன், கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு முதலில் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீமாகாளியம்மன் , விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் மோட்டார் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. இறுதியாக கோ மாதா பூஜை நடத்தப்பட்டது. இதில் உடுமலை , தாராபுரம் ,குடிமங்கலம் ,கோவிந்தாபுரம்,குண்டடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக திரண்டு வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News