உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
தடகள போட்டியில் சாதனை உடுமலை கல்லூரி மாணவிக்கு பாராட்டு
- தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றமகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
- அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
உடுமலை :
தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற உடுமலை ஜிவிஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் படித்து வரும் ஜி.வைஷாலி (முதலாம் ஆண்டு மாணவி) 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், மேலும் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.
இந்நிலையில் கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத், ஆலோசகா் மஞ்சுளா, முதல்வா் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குநா் பா.சுஜாதா மற்றும் பேராசிரியா்கள் மாணவியை பாராட்டினா்.