உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசிய காட்சி.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு இலவச போன் நம்பர் - மேயர் அறிவிப்பு

Published On 2022-07-13 10:33 GMT   |   Update On 2022-07-13 10:33 GMT
  • 4வது குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக குடிநீர் சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது.
  • குப்பை அகற்றும் பணிக்கு புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் வாங்கப்படும்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்டம் அரங்கில் நடந்தது.

கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

மாநகராட்சிக்கு 497 பேட்டரி வாகனங்கள் வாங்கியதாக ஆவணங்கள் உள்ளது. இதில், தற்போது 202 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. வாகனங்கள் சப்ளை செய்த நிறுவனம், அதை பெற்று கொண்ட அதிகாரிகள், பயன்படுத்த வழங்கிய அலுவலர்கள் அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

குடிநீர் பிரச்னையில் 4வது குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது. பயன்பாட்டில் இல்லாத மேல்நிலைத் தொட்டிகள் கணக்கெடுக்கப்பட்டு–ள்ளன. அவை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.குழாய் பதிப்பு பணிக்குப்பின் சாலை முறையாகப் பராமரிக்காவிட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணி நடைபெறும் இடங்களில் உரிய விவரங்களுடன் தகவல் பலகை வைக்கப்படும்.விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர திட்டமதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது.

விடுபட்ட பகுதிகள் குறித்து கவுன்சிலர்கள் தகவல் அளிக்கலாம். குப்பை அகற்றும் பணிக்கு புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் வாங்கப்படும்.ஊட்டச்சத்து துறை மூலம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். மாநக ராட்சியில் மக்கள் குறை கேட்புக்காக 155304 என்ற டோல் பிரீ எண் பெறப்பட்டுள்ளது. இதனால், வசதிகள் உள்ளிட்ட எந்த துறை குறித்த புகார்களும் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News