உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பிரதமரின் உதவித்தொகை பெற ஆதார் எண்ணை புதுப்பிக்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்

Published On 2022-12-03 12:44 IST   |   Update On 2022-12-03 12:44:00 IST
  • வேளாண்மை துறை அலுவலர் மூலம் நிலம் சரிபார்த்து பணி செய்த விவசாயிகள் ஆதார் எண்ணை புதுப்பிக்காமல் உள்ளனர்.
  • விவசாயிகளும் உடனடியாக ஓரிரு நாட்களில் இப்பணியினை செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காங்கயம் : 

காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- காங்கயம் வட்டாரத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதித்தொகை பெற அனைத்து விவசாயிகளும் ஆதார் எண்ணை உறுதி செய்யும் பணியினை உடனடியாக வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலோ அல்லது பொது சேவை மையம் மூலமாகவோ செய்திட வேண்டும்.

4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளதால் ஆதார் எண்ணை புதுப்பிக்காத விவசாயிகள் இந்த செய்தியை கண்டவுடன் உடனடியாக இப்பணியை செய்தால் தான் அடுத்த காலாண்டுக்கான தவணைத் தொகை தங்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஏற்கனவே வேளாண்மை துறை அலுவலர் மூலம் நிலம் சரிபார்த்து பணி செய்த விவசாயிகள் ஆதார் எண்ணை புதுப்பிக்காமல் உள்ளனர். காங்கயம் வட்டாரத்தில் 1,800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆதார் எண்ணை பிரதம மந்திரி கிஷான் திட்டத்துடன் இணைக்காத நிலையில் உள்ளனர். அனைத்து விவசாயிகளும் உடனடியாக ஓரிரு நாட்களில் இப்பணியினை செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News