உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

இன்று முதல் திருப்பூா் தெற்கு உழவா் சந்தை மாலையிலும் இயங்கும் வேளாண் அதிகாரிகள் அறிவிப்பு

Published On 2022-11-03 12:31 IST   |   Update On 2022-11-03 12:31:00 IST
  • தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டத்துக்கு ஒரு மாலை நேர உழவா் சந்தை செயல்படும் என்று அறிவித்திருந்தாா்.
  • திருப்பூா் தெற்கு உழவா் சந்தையானது இன்று முதல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும்.

திருப்பூர் :

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டத்துக்கு ஒரு மாலை நேர உழவா் சந்தை செயல்படும் என்று அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பின்படி திருப்பூா் தெற்கு உழவா் சந்தையானது இன்று முதல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும்.

இதில், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தரமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் ( சமையல் எண்ணெய், சத்துமாவு வகைகள், நீரா, நாட்டுச் சா்க்கரை) பயறு வகைகள், பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த உழவா் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Tags:    

Similar News