திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு
- ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
- இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
திருப்பூர்
தி.மு.க., திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட காங்கயம் தொகுதி பொறுப்பாளர் உமாராணி, மடத்துக்குளம் தொகுதி பொறுப்பாளர் சித்–திக், தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் நாகராஜன், உடுமலை தொகுதி பொறுப்பாளர் தமிழ்மறை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை வரும் ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. தொண்டர்கள் தங்கள் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக, இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மூலனூர் குட்டை முருங்கைக்கு அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிப்பு செய்ததற்கு விவசாயிகள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, பட்ஜெட்டில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளில் திட்டம் தொடங்கப்படும் என்று அறி–வித்த முதல்-அமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.