உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
திருப்பூர் ரவுடி கொலை வாலிபர் கோர்ட்டில் சரண்
- பாரப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் உட்பட 8பேரை போலீசார் கைது செய்தனர்.
- சிவப்பிரகாஷ் (28) திருப்பூர் ஜே.எம்-4 கோர்ட்டில் சரணடைந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஜெய்நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30).இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. சந்திராபுரம் மதுக்கடையில் போதையால் எழுந்த பிரச்னையால் தினேஷ்குமாரை, கே.என்.பி., சுப்ரமணியம் நகருக்கு அழைத்துசென்று 10 பேர் கொண்ட கும்பல் குத்திக்கொன்றது.
இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த பாரப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் உட்பட 8பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய திருப்பூர் டூம்லைட் மைதானத்தை சேர்ந்த சிவப்பிரகாஷ் (28) என்பவர், திருப்பூர் ஜே.எம்-4 கோர்ட்டில் சரணடைந்தார். இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.