முகாமில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை- தலைமுடி தானம் வழங்கும் முகாம்
- ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் பெண்களுக்கான ஒருநாள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது .
- முகாமானது ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது
திருப்பூர் :
திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் பெண்களுக்கான ஒருநாள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது .
திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி அமைப்புடன் பள்ளியில் செயல்பட்டு வரும் மாணவர்களின் இன்ட்ராக்ட் அமைப்பும் இணைந்து நடத்திய இந்த முகாமானது ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது . ரோட்டரி அமைப்பின் மாவட்ட ஆளுநர் மருத்துவர் சுரேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் உடல்பாதுகாப்பு மற்றும் அதற்கான மருத்துவ முறைகள் பற்றி விளக்கி பேசினார்.
அதனைத்தொடர்ந்து சுமார் 160க்கும் அதிகமான பெண்கள் தங்களை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி தகுந்த மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர் .மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாணவிகள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து தங்கள் தலைமுடிகளை தானமாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி அமைப்பை சார்ந்த ஆனந்த்ராம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். முடிவில் ஏ.வி.பி., பள்ளி மாணவர்களின் இன்ட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதா நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.