உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
ஊதியூா் அருகே டிப்பா் லாரி கவிழ்ந்து விபத்து
- லாரி நிலைதடுமாறி, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- லாரியில் சரக்கு எதுவும் இல்லாததால், ஓட்டுநா் மணிகண்டன் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.
காங்கயம்:
தாராபுரத்தில் இருந்து திருப்பூா் நோக்கி டிப்பா் லாரி சென்று கொண்டிருந்தது. கொடுவாய் பகுதியில் சென்றபோது திடீரென லாரி நிலைதடுமாறி, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியில் சரக்கு எதுவும் இல்லாததால், ஓட்டுநா் மணிகண்டன் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.