உள்ளூர் செய்திகள்

திருக்குறள் புத்தகத்தை பதிவுதபாலில் அனுப்பி வைத்த காட்சி.

தமிழக கவர்னருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பி வைப்பு

Published On 2022-10-13 08:11 GMT   |   Update On 2022-10-13 08:11 GMT
  • திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிக்கிறது என தமிழக கவர்னர் ஆர். என். ரவி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.
  • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருக்குறள் புத்தகத்தை பதிவுதபாலில் அனுப்பி வைத்தனர்.

உடுமலை :

திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிக்கிறது என தமிழக கவர்னர் ஆர். என். ரவி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்துதிருக்குறள்குறித்துக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தமிழக கவர்னருக்கு உடுமலை தபால் நிலையத்திலிருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருக்குறள் புத்தகத்தை பதிவுதபாலில் அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சங்க உடுமலை ஒன்றிய தலைவர் ஆ. ராமசாமி, செயலாளர் தமிழ் தென்றல், கமிட்டி உறுப்பினர்கள் உரல் பட்டி கருப்புசாமி ,வி கே புரம் லோக முருகன், ஜல்லிபட்டி அஜித், குடிமங்கலம் செயலாளர் ஓம் பிரகாஷ், தாலுகா செயலாளர் கனகராஜ் ,ரங்கநாதன், சிஐடியு. செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர் .பின்னர் நிர்வாகிகள் கூறுகையில், கவர்னர் திருக்குறளை சரியாக படிக்க வேண்டும் .சனாதனத்தை புகுத்த நினைக்க கூடாது. தமிழர் பண்பாட்டை கொச்சைப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் மதவெறிக்கு இடமில்லை. மனுதர்மத்தை முறியடிப்போம் மக்கள் ஒற்றுமை காத்திடுவோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் குறள்வழி நிற்போம் என கூறினர்.

Tags:    

Similar News