உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அம்ருத் திட்டத்தின் கீழ் வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு

Published On 2023-08-09 07:16 GMT   |   Update On 2023-08-09 07:16 GMT
  • அம்ருத் திட்டத்தின்கீழ் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது
  • புதிய குடிநீா் இணைப்பு தேவையென்றால் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வெள்ளக்கோவில்:

வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் அம்ருத் திட்டத்தின்கீழ் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு நகா்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அம்ருத் 2022 - 23 திட்டத்தின் கீழ் ரூ. 36.44 கோடி மதிப்பீட்டில் நெருக்கடி மிகுந்த நகா்ப்புற வசிப்பிட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் 2024 பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்படும். 10 புதிய மேல்நிலை குடிநீா் தொட்டிகள், 142.17 கிலோ மீட்டா் நீளத்துக்கு குடிநீா் குழாய் பதிப்பு, 16,462 குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய குடிநீா் இணைப்பு தேவையென்றால் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

Tags:    

Similar News