உள்ளூர் செய்திகள்

கறவைப் பாலுடன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த பா.ஜ.க வினர்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - பா.ஜனதாவினர் கறவைப்பாலுடன் வந்து மனு

Published On 2023-03-20 11:07 GMT   |   Update On 2023-03-20 11:07 GMT
  • விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை.
  • மாட்டுப் பாலுக்கு 50 ரூபாய், எருமை பாலுக்கு 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் மலர்கொடி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல், விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கறவை பாலுடன் வந்து திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருப்பது கால்நடை வளர்ப்பு, அவ்வகையில் விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை மட்டுமே எனவே விவசாயிகளின் நலன் கருதி அரசு பால் கொள்முதல் குறைந்தபட்ச விலையை மாட்டுப் பாலுக்கு 50 ரூபாய்,எருமை பாலுக்கு 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும்.அதேபோல் மாட்டு தீவன வகையிலான சோளத்தட்டு வைக்கோல் போன்றவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.அரசு ஆவின் மூலம் வழங்கும் அடர் தீவனத்தை நல்ல தரத்துடன்அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.பால் கொள்முதல் நிலையங்களில் எந்த பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் இல்லாமல் பால் கொள்முதல் அனைவரிடத்திலும் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News