உள்ளூர் செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் தொடங்கி வைத்த காட்சி. 

வீரசோழபுரத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2022-11-07 05:53 GMT   |   Update On 2022-11-07 05:53 GMT
  • வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வீரசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாமினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களும், மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ் 18,70 லட்சம் பயனாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் 1298 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சக்திவேல் பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News