உள்ளூர் செய்திகள்

கைதான அன்புச்செல்வன்.

பல்லடம் அருகே வாலிபர் கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது

Update: 2022-06-28 11:05 GMT
  • கோபாலின் மனைவி சுசீலாவும், அவரது கள்ளக்காதலன் மாரீஸ்வரன் இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கொலை செய்தனர்.
  • இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அன்புச்செல்வன் சிக்கினார்.

 பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை, லட்சுமி நகர் பகுதியில் கடந்த மே.4ந் தேதி கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோபால்( வயது 35) என்பவரை சிலர் துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், ஆகியோர் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் கோபாலின் மனைவி சுசீலாவும், அவரது கள்ளக்காதலன் மாரீஸ்வரன் இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட, மாரீஸ்வரன், விஜய், மதன்குமார், மணிகண்டன், லோகேஸ்வரன், வினோத், கோபாலின் மனைவி சுசீலா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்த திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த குட்டி என்கிற அன்புச்செல்வன்(வயது 36) பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் நடமாடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர் சிக்கினார். இதையடுத்து போலீசார் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News