உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலையில் நூலகர் தினவிழா இன்று மாலை நடக்கிறது

Published On 2022-08-12 05:59 GMT   |   Update On 2022-08-12 05:59 GMT
  • சனிக்கிழமை 75 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் சுதந்திர தின விழா ஓவிய போட்டிகள் நடைபெறுகிறது.
  • 75 நூல்கள் தொடர்ச்சியாக வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

உடுமலை :

உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் நூலகத் தந்தை எஸ் ஆர் ரங்கநாதன் பிறந்தநாள் நூலகர் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நூலகர் தின விழாவிற்கு நூலக வாசகர் வட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமை வகிக்கிறார். நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்.பி அய்யப்பன், எஸ் .ஆர். ரங்கநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கிறார். இதில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் ,செயலாளர் சக்தி ,பயிற்சியாளர் நாயப்சுபேதார் ,நடராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நூலகப் பயன்பாடு குறித்த கட்டுரை ,கவிதை, பேச்சுப் போட்டியில் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து 14 ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு 75 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் சுதந்திர தின விழா ஓவிய போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகளை நூலக மகளிர் வாசகர் வட்ட தலைவர். நல்லா சிரியர் விஜயலட்சுமி ஒருங்கிணைக்கிறார்.

ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தின விழா அன்று முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நூலக வளாகத்தில் கொடியேற்று விழா நடைபெற்று தொடர்ந்து வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி 75 நூல்கள் தொடர்ச்சியாக வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் முன்னாள் ராணுவீரர்கள் நலச் சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

Tags:    

Similar News