உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
காங்கயத்தில் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
- பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமாா் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
- இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
காங்கயம்:
காங்கயம், காமராஜா் நகரைச் சோ்ந்தவா் லோகநாதன் (55). இவா் சிற்றுந்து (மினி பேருந்து) ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவருக்கும், பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமாா் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் குமாரின் மகன் மணிகண்டன் (24) லோகநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லோகநாதன் அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.