உள்ளூர் செய்திகள்

போதை தவிர்ப்பு உறுதிமொழி மேற்கொண்ட காட்சி. 

திருப்பூரில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி

Published On 2023-04-15 07:36 GMT   |   Update On 2023-04-15 07:36 GMT
  • சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • புத்தக வாசிப்பு என்பது, மாணவர்கள் மத்தியில் குறைந்து விட்டது.

திருப்பூர் :

தமிழக அரசின் 'தமிழ்க் கனவு' நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர், காங்கயம் ரோடு புனித ஜோசப் மகளிர் கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் குழந்தை தெரஸ் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பேசுகை யில், மாணவ, மாணவிகள், பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில், இலக்கியம், பாரம்பரியம், கலை, அறிவியல்போன்வற்றை கற்றுக் கொள்ள வேண்டும். அரசு பணி தொடர்பான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும். சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இதற்கெல்லாம் மேலாக சமூக நீதி, சமத்துவ பண்பு களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கலெக்டர் வினீத் பேசுகை யில்,மாணவ ர்களின் எதிர்கா லம் சிறக்க, அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்க ப்படுகின்றன. கலாசாரம், பண்பாடு குறித்து மாண வர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்.பி., திருச்சி சிவா, படிப்போம் நிறைய என்ற தலைப்பில் பேசியதாவது:- இன்றைய சூழலில் இ-மெயில், இன்டர்நெட், வாட்ஸ் ஆப் என சமூக ஊடகங்கள் வாயிலாக அனைத்து தகவல்களையும் தெரிந்துக்கொள்ள முடி கிறது. இதனால், புத்தக வாசிப்பு என்பது, மாணவர்கள் மத்தியில் குறைந்து விட்டது. குறிப்பா க,நூலகங்களுக்கு சென்று படிப்பது வெகுவாக குறைந்து விட்டது.நூலகம் சென்று புத்தகங்களை படிப்பது என்பது, அங்கு, ஆயிரக்கணக்கான அறி ஞர்கள் அமர்ந்திருப்பதாக அர்த்தம். படிக்க, படிக்க அறிவு பெருகும். சிந்தனை வளரும். பாடத்தி ட்டத்தோடு நின்றுவிடாமல், அதைத்தா ண்டி நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஈரோடு, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டா லின் குணசேகரன், பேசி னார். முன்னதாக, போதை தவிர்ப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். நிகழ்ச்சியில் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

Tags:    

Similar News