உள்ளூர் செய்திகள்

 முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்ற காட்சி.

தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Update: 2023-06-10 11:47 GMT
  • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
  • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன்படி பல்லடம் மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலைக்கோவிலில்வைகாசி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல பல்லடம் காந்தி ரோடு பால தண்டாயுதபாணி கோவில், பொன் காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News