உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் வழியாக பெங்களூரு-கண்ணூர் இடையே சிறப்பு ரயில்நாளை இரவு இயக்கப்படுகிறது

Published On 2023-03-06 11:14 IST   |   Update On 2023-03-06 11:14:00 IST
  • இரவு 11:55 க்கு பெங்களூருவில் புறப்படும்
  • கண்ணூரில் இருந்து மார்ச் 8ம் தேதி இரவு 10:40க்கு புறப்படும்.

திருப்பூர் :

பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க பெங்களூரு - கண்ணூர் இடையே சிறப்பு ரயில் நாளை (7 ம் தேதி) இயக்கப்படுகிறது. அதன்படி நாளை இரவு, 11:55 க்கு பெங்களூருவில் புறப்படும் ரயில் (06501), மறுநாள் மதியம், 2:00 மணிக்கு கண்ணூர் சென்று சேரும். கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொர்ணூர், திரூர், கோழிக்கோடு ஸ்டேஷன்களில் ரயில் நின்று செல்லும்.

மறுமார்க்கமாக கண்ணூரில் இருந்து மார்ச், 8ம் தேதி, இரவு, 10:40க்கு புறப்படும் ரயில், மறுநாள் மதியம், 1:00 மணிக்கு பெங்களூரு சென்று சேரும்.இத்தகவலை தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News