உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

விவசாயிகளுக்கு சிறுதானிய உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

Published On 2023-08-25 12:54 IST   |   Update On 2023-08-25 12:54:00 IST
  • பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது
  • உரச் செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விரிவாக கூறினார்.

திருப்பூர்:

உடுமலையை அடுத்த எலையமுத்தூர் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது.

உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி வரவேற்புரை ஆற்றியதுடன் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து உரைத்தார்.

பயிற்சியில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் கலந்து கொண்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.  

அப்போது அவர் கூறுகையில், தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களையும், அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், கோடை உழவு செய்யும் முறை மற்றும் பயன்கள் பற்றி கூறினார். மேலும் குறுகிய கால தானியம் மற்றும் தட்டு மகசூல் தரவல்ல கோ (எஸ்) -32 ரக சோளத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் விதை, வேர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் விதை நேர்த்தி, உரச் செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விரிவாக கூறினார்.

Tags:    

Similar News