உள்ளூர் செய்திகள்

மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

பாலியல் புகார்கள் கமிட்டிகளை அமைக்க வேண்டும் - மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்

Published On 2022-06-28 10:51 GMT   |   Update On 2022-06-28 10:51 GMT
  • பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி, பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார்கள் கமிட்டிகளை அமைத்திட வேண்டும்.

பல்லடம் :

பல்லடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16வது திருப்பூர் மாவட்ட மாநாடு தனியார் திருமணமண்டபத்தில்நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் மைதிலி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் சாவித்திரி, சங்க நிர்வாகிகள் வசந்தி, செல்வி, லட்சுமி, சரஸ்வதி, பானுமதி, கவிதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட செயலாளர் பவித்ரா தேவி வரவேற்றார். மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய், மத்தியகுழு உறுப்பினர் பிரமிளா, மாநில செயற்குழு உறுப்பினர் கிரிஜா, ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

திருப்பூர் மாவட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்து பெண்கள் வந்து வேலை செய்து வருகிறார்கள். பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி , பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார்கள் கமிட்டிகளை அமைத்திட வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர் . ஆனால் மருத்துவமனை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது . மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்ந்த போதும் , படுக்கை வசதி ,குடிநீர், மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையாக உள்ளது. அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும். திருப்பூர் மாநகராட்சியாகவும், ஸ்மார்ட் சிட்டியாகவும் தரம் உயர்ந்து உள்ளது. ஆனால் வார்டுகளில் குப்பை ,சாக்கடை தூர் வாராமல் தேங்கி இருக்கக்கூடிய நிலையிலும், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமலும் இருப்பதால், மழைநீர் வீடுகளில் புகுந்து விடும் நிலையாக உள்ளது .

ஆகையால் அடிப்படை வசதிகள் துரிதமாக செய்து தர வேண்டும். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அகற்றிட வேண்டும். தகுதியுடைய அனைவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முறையாக வழங்க வேண்டும் ்உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் வழக்கறிஞர் தமயந்தி, டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் மணிகண்டன், எஸ். எப். ஐ. சம்சீர் அகமது, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் பரமசிவம், மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News