உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி. 

மடத்துக்குளத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-11 04:45 GMT   |   Update On 2022-08-11 04:45 GMT
  • சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்க வேண்டும்.
  • மாவட்ட தலைநகரங்களில் வரும் 30ந் தேதி தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் :

தமிழகத்தில் முதல் கட்டமாக துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமுல்படுத்த பட்டு உள்ளது. இத்திட்டத்தை அம்மா உணவகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவதை கைவிட்டு சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மடத்துக்குளம் வட்டார கிளை தலைவர் அபிராமி ,செயலாளர் பூங்கோதை, பொருளாளர் தனலட்சுமி ,மாவட்ட இணைச்செயலாளர் செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் சத்துணவு ஊழியர்களின் 40 ஆண்டு கால வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வரும் 30ந் தேதி தர்ணா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல உடுமலை ஒன்றிய அலுவலகம் முன்பும் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Tags:    

Similar News