உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

செங்கப்பள்ளி கோவிலில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் தப்பியோடிய கொள்ளையர்கள்

Published On 2022-07-29 11:09 GMT   |   Update On 2022-07-29 11:09 GMT
  • கோவிலில் பூஜைகள் முடிவடைந்து இரவு 9 மணி அளவில் கோவில் பூட்டப்பட்டது.
  • கோவிலின் பூட்டை மா்ம நபா்கள் அதிகாலை 2 மணி அளவில் உடைக்க முயன்றுள்ளனா்.

ஊத்துக்குளி :

ஊத்துக்குளியை அடுத்த செங்கப்பள்ளியில் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலில் பூஜைகள் முடிவடைந்து இரவு 9 மணி அளவில் கோவில் பூட்டப்பட்டது. இதனிடையே கோவிலின் பூட்டை மா்ம நபா்கள் அதிகாலை 2 மணி அளவில் உடைக்க முயன்றுள்ளனா். அப்போது கதவில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியைக் கைவிட்ட மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News