உள்ளூர் செய்திகள்

சாலைப்பணியாளர்கள் பட்டை நாமம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்சி.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை பணியாளர்கள் பட்டை நாமம் போட்டு ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-10 11:49 GMT   |   Update On 2023-03-10 11:49 GMT
  • ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 5,200 முதல் 20 ஆயிரத்து 200 வரை வழங்க வேண்டும்.
  • உயர்நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

திருப்பூர் :

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் , அதேபோல் சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 5,200 முதல் 20 ஆயிரத்து 200 வரை வழங்க வேண்டும், ஆனால் தற்போது 1,900 மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், அதேபோல் சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணி காலத்திலும் உயர்நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பத்து சதவீதம் ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சலவை படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் பட்டை நாமம் போட்டு திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி உடல் முழுவதும் பட்டை நாமம் அணிந்தும் போராட்டம் செய்தனர்.

Tags:    

Similar News