கோப்புபடம்
- விபத்துகளுக்கு பெரும்பாலும் விதிமுறை மீறலும் அலட்சியமான மனநிலை யும் முக்கிய காரணங்களாக உள்ளன.
- விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அவிநாசி:
திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் வாகன விபத்துக்கள் நடந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விபத்துகளுக்கு பெரும்பாலும் விதிமுறை மீறலும் அலட்சியமான மனநிலை யும் முக்கிய காரணங்களாக உள்ளன. இவற்றை விளக்கும் வகையில் சாலை விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியை திருப்பூர் மாவட்ட காவல்துறை, அவிநாசி போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை கூத்துப்பட்டறை மாணவர்கள் சார்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
34 -வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா வையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மொபைல் போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் வருவோர்,அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவோர் மற்றும் போதையில் வாகனத்தை ஓட்டுவோர் எவ்வாறு விபத்தில் சிக்குகின்றனர், விபத்து நேரங்களில் ரத்தப் பெருக்கால் ஏற்படும் பதற்றம், பரபரப்பு, விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து சென்னை கூத்துப்பட்டறை மாணவர்கள் தத்துவமாக நடித்து காட்டினர்.
அவிநாசி காவல்துறை கண்காணிப்பாளர் பால்ராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் ,உதவி ஆய்வாளர் லோகநாதன் மற்றும் சென்னை கூத்துப்பட்டறை ஒருங்கிணைப்பாளர் மதுரை லட்சுமி, இயக்குனர் முத்துசாமி, கார்த்திகேயன், சந்தோஷி ஆகியோர் கலந்து கொண்டு விபத்து குறித்தும் விபத்துக்களை தடுப்பது குறித்தும் விளக்கினர்.