உள்ளூர் செய்திகள்
முத்தூர் பஸ் நிலையம் அருகில் கிளை நூலகம்.
முத்தூரில் கிளை நூலகத்தை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
- போட்டித் தேர்வுக்கு படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு கிளை நூலகம் பயனுள்ளதாக இருக்கும்..
- கிளை நூலகம் முழு நேரம் செயல்படுத்தப்பட்டால் பொதுமக்கள் பயனடைவர்.
வெள்ளகோவில்:
முத்தூர் பஸ் நிலையம் அருகில் கிளை நூலகம் செயல்படுகிறது. இதை விரிவாக்கம் செய்து முழு நேர நூலகமாக செயல்படுத்தினால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் ,பொதுமக்கள் ,முதியவர்கள் பயனடைவார்கள்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலமாக மாணவ மாணவிகள் மாலை நேரத்தில் நூலகத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான பாடநூல்கள், வரலாறு, கவிதை, கதை, நாவல் மற்றும் இலக்கியங்கள் உள்ளிட்ட பொது அறிவு நூல்களைப் படிப்பதற்கு வசதியாக இருக்கும். போட்டித் தேர்வுக்கு படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு பயன்படும். ஆகவே நூலகத்தை விரிவாக்கம் செய்து முழு நேர நூலகமாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.