உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாரம் 3 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்க பரிந்துரை

Published On 2023-05-31 10:49 GMT   |   Update On 2023-05-31 10:49 GMT
  • பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயிலை கோவைக்குத் திருப்ப வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
  • தென் மாவட்டங்களுக்கான பல்வேறு ெரயில்வே கோரிக்கைகள் பரிந்துரை அளவில் நிற்கின்றன.

உடுமலை:

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், தென் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு பயனளிக்கும் வகையில், ஏற்கனவே மீட்டர் கேஜ் இருந்தபோது கோவையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பல்வேறு ெரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வசிப்பதால், அவர்களுக்காக மேட்டுப்பாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயிலை கோவைக்குத் திருப்ப வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

போத்தனூர் ரெயில் பயனர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்ரமணியம் இது தொடர்பாக தெற்கு ெரயில்வேக்கு அனுப்பியிருந்த மனுவுக்கு, அங்கிருந்து பதில் வந்துள்ளது. அதில் இந்த இரண்டு ெரயில்கள் தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மேட்டுப்பாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு வாரம் 3 நாட்கள் சிறப்பு ெரயில் இயக்கவும், அந்த ெரயிலை துாத்துக்குடியில் பராமரிப்பு பணி செய்யவும், தெற்கு ெரயில்வே சார்பில் திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது. அந்த பரிந்துரை ெரயில்வே வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது.

அதேபோன்று, பாலக்காடு-திருச்செந்தூர் ெரயிலில் செல்வதற்காக, கோவை சந்திப்பிலிருந்து நூற்றுக் கணக்கான பயணிகள் செல்வதால், அவர்களுக்காக, கோவை-பொள்ளாச்சி-கோவை இடையே, ஓர் இணைப்பு ெரயிலை இயக்கவும் தெற்கு ெரயில்வே பரிந்துரை அனுப்பியுள்ளது. இந்த ெரயிலை இயக்குவது தொடர்பாகவும், ெரயில்வே வாரியம் தான் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி ெரயிலை வாரம் 3 நாள் இயக்குவது, கோவை-ராமேஸ்வரம் இரவு நேர ெரயில், ரிசர்வேஷன் பெட்டிகளுடன் கூடிய மதுரை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லுக்கு பகல் நேர ெரயில் என தென் மாவட்டங்களுக்கான பல்வேறு ெரயில்வே கோரிக்கைகள் பரிந்துரை அளவில் நிற்கின்றன. அவற்றுடன் இந்த பரிந்துரைகளையும், தேர்தலுக்கு முன் நிறைவேற்றினால் நல்லது.

Tags:    

Similar News