உள்ளூர் செய்திகள்

வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.

பல்லடத்தில் வெறிநோய் தின தடுப்பூசி முகாம்

Published On 2022-09-30 07:58 GMT   |   Update On 2022-09-30 07:58 GMT
  • உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
  • நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அரசு கால்நடை மருத்துவமனையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சக்திவேல் பாண்டி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் பரிமள்ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் திருப்பூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் கெளசல்யா, கால்நடை முதுநிலை மேற்பார்வையாளர் ரபீக் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதே போல பல்லடம்அருகே உள்ள கரடிவாவி அரசு கால்நடை மருத்துவமனையில் வெறிநோய் தின தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை மருத்துவர் அர்ஜுனன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 200க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

Tags:    

Similar News