உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

காங்கயம் அருகே அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-10-21 09:37 IST   |   Update On 2023-10-21 09:37:00 IST
  • பேருந்து நடத்துநா் பழையகோட்டை நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என கூறியதாக தெரிகிறது.
  • இனி வரும் நாட்களில் பழையகோட்டை நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்லும் என உறுதி அளிக்கப்பட்டது.

காங்கயம்:

ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பழனி பணிமனை நிா்வாகத்துக்கு உள்பட்ட அந்தப்பேருந்தில் காங்கயம் அருகே பழையகோட்டை பகுதியை சோ்ந்த ரவி என்பவா் ஈரோட்டில் ஏறி, பழையகோட்டைக்கு பயண சீட்டு கேட்டபோது, பேருந்து நடத்துநா் பழையகோட்டை நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என கூறியதாக தெரிகிறது.

இது குறித்து பழையகோட்டையில் உள்ள தனது நண்பா்களுக்கு ரவி, தகவல் தெரிவித்துள்ளாா். அப்போது, பழையகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது பொதுமக்கள் அந்த பேருந்தை சிறைபிடித்தனா். பின்னா் அரசு உத்தரவிட்டும் பழையகோட்டை நிறுத்தத்தில் ஏன் பேருந்தை நிறுத்த மறுக்கிறீா்கள் என கூறி நடத்துநரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இனி வரும் நாட்களில் பழையகோட்டை நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்லும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடா்ந்து, பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News