உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
காய்ந்த வேப்ப மரத்தை அகற்றாவிட்டால் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு
- தற்போது காய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது.
- கோவிலுக்கு வரும் பக்தா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
திருப்பூர்:
திருப்பூரை அடுத்த அலகுமலையில் பழமை வாய்ந்த அகிலாண்ட விநாயகா் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை ஒட்டியுள்ள பெரிய வேப்பமரம் தற்போது காய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மரம் முறிந்து விழுந்தால் அருகில் உள்ள வீடுகள் சேதமடைவதுடன், மின்கம்பங்களும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.
அதே வேளையில், கோவிலுக்கு வரும் பக்தா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, கோவில் முன் உள்ள காய்ந்த வேப்ப மரத்தை உடனடியாக அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.