உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடக்கம்

Published On 2022-08-27 11:32 IST   |   Update On 2022-08-27 11:32:00 IST
  • பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
  • திருப்பூர் வட்டாரங்களில் உள்ள இளைஞர்களுக்கு அக்டோபர் 8-ந்தேதி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது

திருப்பூர் :

மாநில ஊரகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வெள்ளக்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இன்று தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வருகிற 2-ந்தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 3-ந் தேதி குடிமங்கலம் என்.வி., பாலிடெக்னிக் கல்லூரியிலும், 7-ந் தேதி உடுமலை மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. ஊத்துக்குளி மற்றும் அவிநாசி பகுதி இளைஞர்களுக்கு 17-ந் தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அக்டோபர் 1-ந் தேதி மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பல்லடம், பொங்கலூர் திருப்பூர் வட்டாரங்களில் உள்ள இளைஞர்களுக்கு அக்டோபர் 8-ந்தேதி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது

இதில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், விற்பனை நிறுவனங்கள், பழுதுபார்ப்பு நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்கள், மருந்து விற்பனை நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனம், நிதி நிறுவனம் என பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த முகாமில் இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News