உள்ளூர் செய்திகள்

ல்லூரி வளாகத்தில் கொசு மருந்து அடிக்கப்பட்ட காட்சி.

சிக்கண்ணா அரசு கல்லூரியில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கை - வளாகம் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது

Published On 2022-11-10 08:25 GMT   |   Update On 2022-11-10 08:25 GMT
  • புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர்.
  • மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதற்கான துவக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர்கள், கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வக ங்கள், நூலகம் மற்றும் புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பருவ தேர்வுகள் தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கவும், கல்லூரி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்கவும், குழுக்களை அமைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ள து" என்றார்.

Tags:    

Similar News