உள்ளூர் செய்திகள்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து கோரிக்கை மனு அளித்த காட்சி.

மின்சாரத்துறை அமைச்சருடன் விசைத்தறி சங்கத்தினர் சந்திப்பு

Published On 2023-03-20 11:18 GMT   |   Update On 2023-03-20 11:18 GMT
  • மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
  • நிலுவை கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மற்றும் பிரித்து கட்ட தவணை முறை வேண்டும்.

மங்கலம் :

சென்னையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எல். கே. எம். சுரேஷ், செயலாளர் ஆர். வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர் டி. எஸ்.எ சுப்பிரமணியம், பொருளாளர் கே. பாலசுப்பிரமணியம், செய்தி தொடர்பாளர் கந்தவேல், கோவை மண்டல பொறுப்பாளர் எம்.பாலசுப்பி ரமணியம், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார், மங்கலம் பகுதி விசைத்தறி சங்கத் தலைவர் ஆர்.கோபால், பல்லடம் பொருளாளர் முத்துகுமாரசாமி ஆகியோர் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிரு ப்பதாவது:-

மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். நிலுவை கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மற்றும் பிரித்து கட்ட தவணை முறை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்பாக நேரடியாகவும் கோரிக்கை வைத்தனர். அமைச்சரை சந்தித்த பின்பு விசைத்தறி சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; மின் கட்டண உயர்வால் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கூறினோம். முதலமைச்சரிடம் இது குறித்து பேசி நல்ல முடிவை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றனர். 

Tags:    

Similar News