உள்ளூர் செய்திகள்

சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

உடுமலையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி

Published On 2023-09-28 09:09 GMT   |   Update On 2023-09-28 09:09 GMT
  • சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு வருகிறது
  • வாகனங்கள் குறித்து போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை.

திருப்பூர் : 

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உடுமலை- பழனி நெடுஞ்சாலை உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கொழுமம் பிரிவு வரை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக மத்திய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து கழுத்தறுத்தான் பள்ளம் வரையில் சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எங்கிருந்து இந்த வாகனங்கள் வருகிறது. எதற்காக அங்கு நிறுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.

தேசிய நெடுஞ்சாலையை பார்க்கிங் வசதியாக மாற்றும் வாகனங்கள் குறித்து போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் சாலை அகலமானதற்கான நோக்கமும் வீணாகி உள்ளது. எனவே உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும். இதற்காக போக்குவரத்து போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News