உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 

பல்லடம் அருகே அரசு பஸ்சை முறையாக இயக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-11-10 16:08 IST   |   Update On 2022-11-10 16:08:00 IST
  • அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
  • அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்புச்சி கோவில் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்கள் தொழில், கல்வி, போன்றவற்றிற்காக பல்லடம் மற்றும் திருப்பூர் செல்வதற்கு இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியே அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை என்றும், அறிவிப்பில்லாமல் திடீரென நிறுத்தப்படுவ தாகவும் கூறி, அங்குள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துக்குமார், மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக பஸ் வருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News