உள்ளூர் செய்திகள்

மின் பகிர்மான கோட்ட அலுவலகம் திறப்பு

Published On 2022-12-17 11:12 IST   |   Update On 2022-12-17 11:12:00 IST
  • புதிய மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தொடங்கி வைத்தார்.
  • மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜகுமாரி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஊத்துக்குளி : 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 10 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக ஊத்துக்குளியில் புதிய மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தொடங்கி வைத்தார்.

விழாவில் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனி அம்மாள் ராசுகுட்டி, ஊத்துக்குளி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ,திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜகுமாரி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News