உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரம்

Published On 2022-09-30 10:37 GMT   |   Update On 2022-09-30 10:37 GMT
  • குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் சின்னவெங்காய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்
  • நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும்

குண்டடம் :

குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது ;-

குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம், மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துளளனர் இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை செலவாகிறது100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 6 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினர்.

Tags:    

Similar News