பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய காட்சி.
திருமாவளவன் எம்.பி., பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
- உடுமலையில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
- பாய், தலையணை, நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கப்பட்டது.
உடுமலை :
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்எம்.பி.யின் மணிவிழா பிறந்தநாளையொட்டி உடுமலையில் மாணவர்களுக்கு பாய், தலையணை ,நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள், மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன்முன்னிலை வகித்தார்.கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாநில துணைச்செயலாளர் டேவிட் பால்,துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மையம் மாநில துணைச்செயலாளர் விடுதலை மணி, கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாவட்ட அமைப்பாளர் இம்மானுவேல், அருண்குமார், கடத்தூர் முகாம் செயலாளர் சிவராமன்,கணியூர் முகாம் பொருளாளர் தங்கவேல் கலந்து கொண்டனர். முடிவில் விடுதி காப்பாளர் முருகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.