உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

23-ந் தேதி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - கழிவுநீர் சுத்திகரிப்பு மைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் அறிவிப்பு

Published On 2023-06-20 10:11 GMT   |   Update On 2023-06-20 10:11 GMT
  • வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

 திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு கோம்பை தோட்டம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று காலை கழிவுநீர் சுத்திகரிப்பு மைய எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது :- இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வரும் நிலையில், மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர் என 3 பேரும் தனித்தனியாக செயல்படுகின்றனர்.

நாளை மாநகராட்சி மேயர்., எம்.எல்.ஏ, ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களை திரட்டி 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News